ரத்த அழுத்தத்தை குறைக்க 10 வழிகள்!

இதய நோய்க்கு மிக முக்கியக் காரணம் ரத்த அழுத்தம். ஆம், அதிக ரத்த அழுத்தம் இதய நோய்க்கு மிக முக்கியக் காரணியாக இருக்கிறது என்று அறியப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியாது என்பதால், இதனால் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் 10 வழிகள் என்னென்ன என்பதைக் காண்போம்.
நடைப்பயிற்சி
தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடப்பது ரத்த அழுத்ததைக் கட்டுப்பாடாக வைத்திருக்க உதவும்.
எடை குறைத்தல்
அதிக உடல் எடையும் ரத்த அழுத்தத்திற்குக் காரணி ஆகும். உடல் எடையைக் குறைத்தால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் வரும். எடை குறைக்கும் போது, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து சரியான ரத்தப்போக்கிற்கு உதவும். இதன் மூலம், இதயத்தின் இடது வென்ட்ரிக்கிள் பகுதிக்கு ரத்தம் சீராகப் பாய உதவும்.
புகை மற்றும் மதுப்பழக்கம்
புகை மற்றும் மதுப்பழக்கத்தை கைவிடுவதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். புகைப்பிடிப்பதுதான் அனைத்து நோய்களுக்கும் மூலக்காரணியாக உள்ளது. ஆல்கஹால் ரத்தத்தில் கலப்பதன் மூலம் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். எனவே, இவற்றைக் கைவிடுதல் நலம்.
காபி தவிர்த்தல்
தினமும் அதிக டீ மற்றும் காபி போன்ற பானங்களை அருந்தாமல் இருப்பதும் நன்மை பயக்கும். காபியில் இருக்கக்கூடிய காஃபின் என்கிற வேதிப்பொருள் ரத்த அழுத்தத்தை உண்டு செய்யும் காரணியாகும்.
சீரான டயட்
சீரான உணவுப்பழக்கம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். உணவில் பெர்ரி பழங்கள் சேர்த்துக்கொள்வதன் மூலம், அதில் இருக்கும் பாலிபீனால்கள், உடல்நலத்தைக் காக்கும்.
மேக்னீஸியம் அதிகம் உள்ள உணவுகள்
மேக்னீஸியம் தாதுக்கள் அதிகம் உள்ள உணவுப்பொருட்கள் ரத்தக் குழாய்க்கு நன்மை பயக்கும். இதற்கு பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதேபோல், கோழிக்கறி, பயறு வகைகளிலும் மேக்னீஸியம் அதிக அளவில் உள்ளது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். காரணம், அந்த உணவுகளில் சோடியம் தனிமம் அதிக அளவில் இருப்பதால், அவை ரத்த அழுத்தத்தில் வேறுபாட்டை ஏற்படுத்தும். இவை இதய நோய் மற்றும் வலிப்பு நோய்களை ஏற்படுத்தக்கூடியது.
சோர்வைக் குறைத்தல்ல்
உடல் நலனைக்காக்க உணவுப்பழக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், உடற்சோர்வு அடையாமல் வைத்துக்கொள்வதும் மிக முக்கியம். உடலும், மனதும் சரியாக இருந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். தொடர் மன சோர்வில் இருந்தால், அது ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதற்காக இசை, யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுதல் நலம். இவை ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
கால்சியம் குறைபாடு
கால்சியம் குறைபாடு இருந்தால் ரத்த அழுத்த பிரச்னை ஏற்படும். இதற்கு பச்சைக் காய்கறிகள், பால் பொருட்களை அதிக அளவில் உட்கொண்டால் உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைக்கும்.
பொட்டாசியம் தேவை
பொட்டாசியம் அதிக அளவில் இருக்கும் வாழைப்பழங்கள், பீன்ஸ், கடலைகள், டூனா மீன், பால் பொருட்களை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் ரத்த அழுத்த பிரச்னை வராது.

No comments

Powered by Blogger.