தேங்காய் பாலில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா?


தேங்காய் பாலில் உடல் பலத்திற்கும் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் சி, இ, பி1, பி3,பி5, பி6, இரும்புச்சத்து, கால்சியம், செலீனியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.

* தேங்காய் பால் உட்கொள்வதால் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தினை சீராக்கி மாரடைப்பு வருவதை குறைக்கிறது.

* வறண்ட, உடைந்த, நுனி பிளந்த முடிக்கு ஊட்டச்சத்து கிடைக்க தேங்காய்ப்பால் மூலம் முடியை அலச முடி மிருதுவாகும்

* தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும்.

உடல் எடை குறையும்.

* வறண்ட சருமம் கொண்டவர்கள் தேங்காய் பாலை உடலில் தடவி, 30 நிமிடங்கள் கழித்துக் குளிக்க, அதன் ஈரப்பதம் சருமத்தால் உறிஞ்சப்பட்டு, வறட்சி நீங்கி பளபளப்பாகும்.

* தேங்காய் பாலை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர இளமைப் பொலிவு கிடைக்கும்.

* தேங்காய் பால் உடலின் செரிமான மண்டலத்தினை சீர்செய்து உடல் நலத்தினை மேம்படுத்துகிறது.

* தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால், வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும்.

* தேங்காய் பாலில் உள்ள பாஸ்பரஸ், எலும்பை உறுதியாக்க வல்லது. கர்ப்பிணிகளுக்கு இது நல்லது.

* தேங்காய் பாலில் உள்ள பொட்டாஷியம் சத்து உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும்.

* நீரிழிவு நோயினை கட்டுப்படுத்த உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு தடுக்கப்படும்.

ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.

* பக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான தன்மை கொண்ட தேங்காய்பால், வைரஸ் காய்ச்சல், பூஞ்சை மற்றும் பக்டீரியா தொற்று போன்ற நோய் வராமல் தவிர்க்கும், இதில் உள்ள வைட்டமின் சி உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும்.

* அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.

* கீல்வாதம் இருப்பவர்கள், தேங்காய் பால் சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்

No comments

Powered by Blogger.