அடிக்கடி வாய்புண்ணால் அவதிப்படுகிறீர்களா? வாய்புண் நிரந்தரமாக குணமாக, சில டிப்ஸ்!



• பலா இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
• நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.
• வெல்லம், பாசிப் பயறு சேர்த்துக் கஞ்சியாக குடிக்கலாம். கீரை, பசும்பால், தேங்காய்ப்பால், பீர்க்கங்காய், புடலங்காய், நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
• வெள்ளைப் பூசணிக்காய் அல்லது அகத்திக்கீரையைச் சமைத்து சாப்பிட்டால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.முருங்கைக்கீரை மற்றும் பூ, சிறுகீரையை சமைத்துச் சாப்பிடலாம்.
• கொய்யா இலைகளை மென்று துப்பலாம். அதிமதுரப் பொடி அல்லது கடுக்காய் பொடியை வாங்கி, அதைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம்.
• வாய்ப்புண் உள்ள இடத்தில் சுத்தமான தேனைத் தடவலாம்.
• மோரில் சிறிதளவு உப்பை சேர்த்து அதை ஐந்து நிமிடம் வாயில் வைத்திருந்து பின்பு கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
• ஆர்கானிக் ரோஜாப்பூ இதழ்கள் அல்லது கொட்டைப்பாக்கை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, வாய்கொப்பளிக்க வேண்டும்.
• தேங்காய்ப்பாலை குடிக்கலாம், வாய்க்கொப்பளிக்கவும் செய்யலாம்.

No comments

Powered by Blogger.