அடிக்கடி நீர்க்கடுப்பு வந்தால் நீரிழிவு நோயின் அறிகுறியா?






பெண்களை பாதிக்கும் பிரச்னைகளில் முக்கியமானது நீர்க்கடுப்பு. ஆண்களைப் போன்று பெண்கள் இயற்கை உபாதைகளை எளிதில் கழித்துவிட முடியாது. மேலும் பொது இடங்களில் மட்டுமல்ல பணிபுரியும் இடங்களிலும் ஒருவித அச்சத்தோடு இயற்கை உபாதைகளை அடக்கி கொள்ளவே முயல்கிறார்கள். பள்ளிக்குசெல்லும் பெண் குழந்தைகள் முதல் பணிக்கு செல்லும் பெண்கள் ஆண்கள் வரை அனைவருமே வாழ்வில் ஒரு முறையாவது இந்த நீர்க்கடுப்பு பிரச்னையை சந்திக்கிறார்கள்.
உடலில் 75% வரை தண்ணீர் சத்து இருக்க வேண்டும். தினமும் 4 லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவரும் நிலையில் சிறுநீர் கழிக்க வேண்டுமே என்னும் நினைவில் பல பெண்கள் போதிய நீரை குடிப்பதில்லை என்பதே உண்மை.
தண்ணீர் போதுமான அளவு உடலுக்கு சேராத போது சிறுநீரில் தாதுக்கள் அதிகமாகி சிறுநீரில் அடர்த்தியை அதிகரிக்கச் செய்துவிடுகிறது. இதே போன்று சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி வைத் திருந்தாலும் சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடுகிறது. இதனால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகிறது.
சிறுநீர் கடுப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம். இந்நோய்க்கு காலமெல்லாம் கிடையாது எல்லா காலங்களிலும் இந்த பிரச்னைகள் வரும் என்றாலும் கோடைக்காலத்தில் அதிகமாக வரும். உடலில் இருந்து வெளியேறும் வியர்வையினால் உடலில் சீக்கிரம் நீர் இழப்பு உண்டாகி விடும். போதுமான அளவு திரவம் இல்லையென்றால் சிறுநீர் பாதையில் தொற்றை உண்டாக்கி கடுப்பை ஏற்படுத்தி எரிச்சலை உண்டாக்கிவிடும். பணியில் இருக்கும் பெண்கள் சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் உணர்வு வந்ததும் அடக்கா மல் கழித்துவிட வேண்டும். இல்லையெனில் நீர்கடுப்பு பிரச்னை அவ்வப்போது தொல்லை தரும் என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று.
எந்த நேரமும் வயது பேதமின்றி அனைவரையும் பாடாய்ப்படுத்தும் இந்த நீர்க் கடுப்பை தீவிரப்படுத்தாமல் ஆரம்ப நிலையிலேயே கண்டுகொண்டால் மாத்திரை களின்றி சுய கட்டுப்பாட்டில் நலம்பெறலாம். சிலர் தாகம் எடுக்கும் வரை தண்ணீர் குடிக்காமல் இருப்பார்கள். அப்படி இல்லாமல் அவ்வப்போது தண்ணீர் குடிக்கும் வழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளுங்கள். சிறுநீர் கழித்தவுடன் ஒரு தம்ளர் தண்ணீரை குடிக்க பழக்குங்கள். அதிகாலையில் எழுந்ததும் குறைந்தது 2 தம்ளர் தண்ணீர் குடிப்பதும் நல்லது. கார உணவுகளைத் தவிர்த்து பழங்கள், நீர்ச்சத் துள்ள காய் கறிகள், பழச்சாறுகளை அவ்வப்போது சேர்த்து வரலாம்.
பனங்கற்கண்டு சேர்த்த பால், அன்னாசிப்பழம், வெங்காயம், நன்னாரி, எலுமிச் சைப்பழம், வாழைத்தண்டு, இளநீர், நெல்லிக்காய் சாறு இவையெல்லாம் பட்டிய லிட்டு அவ்வப்போது எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்க்கடுக்கு வந்தவுடன் 5 டீஸ்பூன் கறுப்பு உளுந்தை ஒரு தம்ளர் நீரில் ஊறவைத்து ஒரு மணி நேரம் கழித்து குடித்து வந்தால் நான்கே நாளில் நீர்க்கடுப்பு அதிசயத்தக்க அளவில் காணாமல் போகும். ஆனால் அடிக்கடி நீர்க்கடுப்பு வந்தால் நீரிழிவு நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். சிறுநீரகப்பாதையில் கல், நோய்த் தொற்றாகவும் இருக்கலாம் என்பதால் மருத்துவரைச் சந்திப்பது நல்லது.
அன்றாடம் 4 லிட்டர் தண்ணீர் குடித்தால் நோய் அவஸ்தை எதுவுமே கிடை யாது என்கிறார்கள் கை வைத்தியம் செய்யும் பாட்டிகள்.

No comments

Powered by Blogger.