சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் நுங்கு..!!

நுங்குவின் சதைப்பகுதி 3 டீஸ்பூன், பால் 2 டீஸ்பூன் எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து வேர்க்குரு உள்ள இடங்களில் தேய்த்துக்கொள்ள வியர்க்குரு காணாமல் போகும்.
* ஓட்ஸ் 5 டீஸ்பூன் எடுத்து வேகவைத்துக்கொள்ளவும். இத்துடன் நுங்கின் சதைப்பகுதி சேர்த்து முகத்தில் பேஸ் பேக் போட்டுக்கொள்ள… கோடைக்காலத்திலும் சருமம் பட்டு போன்று பளபளக்கும்.
* தேங்காய் தண்ணீர், நுங்கின் சதைப்பகுதி,கற்றாழையின் சதைப்பகுதி மூன்றும் சம அளவில் எடுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து முகம், கை, கழுத்து போன்ற இடங்களில் அப்ளை செய்து பத்து நிமிடம் கழித்து கழுவ மாசுமருவற்ற சரும அழகைப் பெறலாம்.
* 2 டீஸ்பூன் முல்தான்மெட்டி, 3 டீஸ்பூன் நுங்கின் சதைப்பகுதி எடுத்து ஒன்றாகக் கலந்து முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
மாதம் இரு முறை செய்து வர முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் அழகு பெறும்.
* நுங்குவில் உட்பகுதியில் இருக்கும் தண்ணீரை பஞ்சில் நனைத்து முகத்தைத் துடைக்க வெயிலினால் ஏற்படும் டேனிங் நீங்கி முகம் டால் அடிக்கும்.

No comments

Powered by Blogger.