இரவில் அருந்தும் ஒரு டம்ளர் வெந்நீர் உடல் உறுப்புகளுக்கு என்னவெல்லாம் செய்கிறது!


வெந்நீர் அருந்துவதால் உணவுகள் எளிதில் ஜீரணமாகிறது. உணவு எளிதில் உடைத்து சத்துக்கள் உடலுக்கு கிடைக்க செய்கிறது.
நம் உடலுக்கு நீர் என்பது மிகவும் முக்கிய தேவையாக இருக்கிறது. ஏனென்றால், வியர்வை, சிறுநீர் போன்றவற்றால் உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது. இதனை சமன் செய்ய தொடர்ச்சியாக நீர் அருந்துவது கட்டாயம். இரவு நேரத்தில் வெந்நீர் குடித்துவிட்டு படுப்பதால் உடலில் நீர் தேவை பூர்த்தியாகிறது.
சாப்பிட்டு முடித்தபின் வெந்நீர் அருந்துவதால் செரிமானம் எளிதாக இருக்கும். கடினமான உணவுகள் கூட எளிதில் ஜீரணமாக்க கூடிய திறன் வெந்நீருக்கு உண்டு. இரவு நேரத்தில் செரிமானம் என்பது சற்றே தாமதமாக இருக்கும்.
வெந்நீர் குடுப்பதால் அந்த பிரச்சனை இருக்காது.
ஆம். உண்மையில் ஆரோக்கியத்திற்கும் நம் அழகிற்கும் இரவு நேரத்தில் வெந்நீர் குடிப்பது அவசியம். சிலர் தூங்கும் முன் தண்ணீர் குடித்தால், சிறுநீர் உபாதைகள் ஏற்பட்டு, தூக்கம் கெட்டுவிடும் என்றே தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுவார்கள். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இரவு படுக்கும் முன் வெந்நீர் குடித்தால் தூக்கம் சிறப்பாக இருக்கும். மேலும் வெந்நீர் அருந்துவதால் உண்டாகும் நன்மைகளை பார்ப்போம்

No comments

Powered by Blogger.