இதய நோய் வருவதற்கு இதுவும் ஒரு காரணம்! இனிமே இந்த தப்ப செய்யாதீங்க!


நாம் நமது அன்றாட வாழ்வில் பல முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுகிறோம். இந்த செயல்பாடுகள் நமது தூக்கத்தை இழக்க செய்கிறது. இன்று பல இளைஞர்களின் இரவு, மொபைலுடனே கழிந்து விடுகிறது.
மாரடைப்பு
அலுவகங்கள் மற்றும் சில முக்கியமான இடங்களில் வேலை செய்பவர்கள், இரவு நேரங்களில் அதிகமான நேரம் விழித்திருந்து வேலை செய்கின்றனர்
இவர்களது இந்த செயல் நமது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதோடு, மாரடைப்பு ஏற்படுவதற்கும் வழி வகுக்கிறது.
இரத்தநாளங்கள்
ஒரு மனிதனுக்கு குறைந்தது 7 மணி நேரமாவது தூக்கம் தேவை. தூக்கம் குறைவதால், நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. நமது தூக்கம் குறைவாக இருப்பதால் தான் இதயநோய்கள் ஏற்படுவதாக ஒரு ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
நமது உடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டுமென்றால், நமது உடலில் செயல்படும் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க வேண்டும். தூக்கக் குறைபாடால் மைக்ரோ ஆர்.என்.எ அளவு குறைகிறது. இது குறையும் போது, இரத்ததை கடத்தும் நாளங்கள் பாதிப்படைகிறது.
மன அழுத்தம்
தூக்கம் குறைவாக இருக்கும் போது, அடுத்த நாளுக்குரிய வேலைகளில் முழுமையாக ஈடுபட இயலாது. இதனால் நமக்கு மன அழுத்தம் அதிகமாகி விடுகிறது. இதன் காரணமாக சரியான முறையில் வேலையை செய்ய இயலாமல், நாம் மிகவும் குழப்பம் அடைந்து விடுகிறோம்.

No comments

Powered by Blogger.