ஈறுகள் பராமரிப்பது உங்களின் தினசரி-கடமைகளில் ஒன்றாக இருக்கட்டும். ஏன் தெரியுமா?


பளிச் வெண்ணிற பற்களுடன் சிரித்தால் மட்டுமே வாய் ஆரோக்கியமாக உள்ளதென அர்த்தம் இல்லை. உங்களின் பற்களைவிடவும், இதயம், சிறுநீரகம் போன்ற இதர உடல் உறுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? பற்களை பராமரிப்பது எளிதான விசயம் என்பதால் உங்களுக்கு அதுபற்றி கவலை இல்லை எனச் சொல்கிறீர்களா? இருக்கட்டும், ஆனால், ஒருமுறை மீண்டும் மேலே சொன்னதை பொறுமையாக படித்து பாருங்கள்.
உங்களின் உடலில் என்ன நடக்கிறது என்று வெளியே தெரிவிக்கும் முக்கிய சாளரமாக, உங்களது வாய்தான் உள்ளது. நீரிழிவு நோய் உள்பட அனைத்து நோய்களும் உங்களுக்கு வரப் போவதற்கான அறிகுறியை, உங்களின் வாய்தான் முன்கூட்டியே தெரிவிக்கும். வாய் சுத்தமின்றி இருந்தால், வாய் துர்நுற்றம் மட்டுமில்ல, பற்சிதைவு, ஈறு நோய், மாரடைப்பு மற்றும் குறைப்பிரசவம் உள்ளிட்ட பாதிப்புகளும் வரக்கூடும்.
ஒரு நல்ல டூத் பிரஷ் மற்றும் டூத் பேஸ்ட் வாங்கினால் மட்டுமே போதும் என நம்மில்
பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், நமது வாயில் ஒரு பாக்டீரியா சுரங்கமே செயல்படுகிறது. அதில் உற்பத்தியாகும் பாக்டீரியா, எச்சிலுடன் எளிதில் கலந்து, ஈறுகளுக்கும், பற்களுக்கும் இடையே படிய தொடங்குகிறது. எனவே, பற்களையும், ஈறுகளையும் முழுமூச்சுடன் பாதுகாத்து பராமரிப்பது செய்வதுதான் நமக்கு நல்ல வாய் ஆரோக்கியத்தை கொடுக்கும்.
பல் துலக்குதல் மற்றும் ஃபிளாஸ் செய்தல்
மென்மையான மயிர்க்கால்கள் உள்ள ஒரு பிரஷையும், ஃபுளோரைடு உள்ள டூத் பேஸ்ட்டையும் பயன்படுத்தி, தினசரி 2 முறை பல் துலக்குவது நலம். ஈறுகள் பராமரிப்புக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு டூத்பேஸ்ட்டை வாங்கி, அதனை டூத் பிரஷில் தடவி, பற்களையும், ஈறுகளையும் மென்மையாக சுழற்சி முறையில் தேய்த்திடுங்கள். ஒரு 2 நிமிடம் இவ்வாறு செய்தால், வாய் சுத்தமாகிவிடும்.
ஃபிளாஸிங் செய்வதால், பற்கள் மற்றும் ஈறுகளுக்கு இடையே தங்கியுள்ள உணவுத் துகள்கள் மற்றும் பிளேக் போன்றவை எளிதில் அகற்றப்படுகிறது. இதன்மூலமாக, பற்களின் மீது சுண்ணாம்பு படலம் படருவதையும், அதனால் ஏற்படும் ஈறு நோய் பாதிப்பையும் எளிதில் தடுக்க முடியும்.
சாப்பிட்டு முடிக்கும்போது எல்லாம் மறக்காமல் வாயை ஒருமுறை நீர் ஊற்றி கொப்பளித்து துப்புவது நலம். இதன்மூலமாக, பற்களுக்கு இடையே தங்கியுள்ள உணவுத்துகள்களும், பிளேக் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களும் அகன்றுவிடும். இதுதவிர, மருத்துவரின் ஆலோசனை பெற்ற மவுத்வாஷ் ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு, தினசரி வாயை கொப்பளித்து வந்தால், வாயில் சுண்ணாம்பு படருவதை தடுத்து, பிளேக் வராமல் பாதுகாக்க முடியும்.
எப்போது ஒரு கண் வைத்திருங்கள்
மூக்கடைப்பு, அலர்ஜி, வலி நிவாரணி, சிறுநீர் பெருக்கி மற்றும் நாள்பட்ட நோய்க்கான மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொண்டு வந்தால், உங்களுக்கு உமிழ்நீர் சுரப்பது குறைந்துவிடும். வாயில் உள்ள பாக்டீரியா சுரக்கும் அமிலங்கள் மற்றும் உணவுப்படிமங்களை அகற்றுவதற்கு உமிழ் நீரின் பங்களிப்பு மிக முக்கியமாகும். வாய் உலர்ந்து இருக்கும்பட்சத்தில், பற்சிதைவு மற்றும் வாய் தொற்றுநோய்கள் எளிதில் ஏற்படும்.
சில நேரங்களில், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் ஈறு நோய் வருவது உண்டு. ஈறு நோய் இருக்கும் நபர்களால், அவர்களின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது கடினம் என சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அப்படியான நபர்கள், தினரி ஈறுகளை பராமரிப்பதோடு, நீரிழிவு நோயையும் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
சிலசமயம், பாதிக்கப்பட்ட பற்களை நீக்கிவிட்டு, புதிய செயற்கை பற்களை வைக்க வேண்டிய அவசியமும் ஏற்படும். அவை உங்களின் ஈறுகளின் மீதுதான் பொருத்தப்படும். அப்படியான செயற்கை பற்கள் பொருத்தியபிறகு, நீங்கள் உணவுகளை அப்படியே கடித்து சாப்பிட முடியாது. சிறு சிறு துண்டுகளாக நறுக்கித்தான் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிட வேண்டும். இதன்மூலமாக, ஈறுகளில் வீக்கம் எதுவும் ஏற்படாமல் தடுக்க முடியும்.
இது தவிர, இளஞ்சிவப்பாக உள்ள ஈறுகள், நல்ல உடல்நலத்திற்கான அறிகுறியாகும். ஈறுகள் சிவந்துவிடுவது, வீக்கமாக இருப்பது, மென்மையாக இருப்பது அல்லது தேய்ந்து போவது போன்ற அறிகுறிகளை நீங்கள் காண நேரிட்டால், உடனடியாக, ஒரு பல் மருத்துவரை சந்தித்து, தேவையான சிகிச்சையை மேற்கொள்வது நலம்.
சீரான இடைவெளியில் பற்களை பரிசோதிப்பது நலம்
சீரான இடைவெளியில் அவ்வப்போது பல் மருத்துவரை சந்தித்து, பற்களை பரிசோதித்துக் கொள்வது நலம். அத்துடன், பற்களை சுத்தம் செய்வதன் மூலமாக, பற்களில் உள்ள பிளேக்கை அகற்றிவிடலாம். அத்துடன், ஈறு நோய் மற்றும் ஜின்ஜிவிடிஸ் (ஈறு வீக்கம்) போன்றவை வராமலும் தடுக்க முடியும்.
நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றிடுங்கள்
# புகைபிடிப்பதை நிறுத்துங்கள் - உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை புகையிலை பழக்கம் படிப்படியாக பாதிக்கிறது மற்றும் ஈறு நோய் ஏற்படவும் வழிவகுக்கிறது.
# சரியானதை சாப்பிடுங்கள் - பால், பாலாடைக்கட்டி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். பற்களில் படியக்கூடிய இனிப்புகளை சாப்பிடாதீர்கள். சூயிங்கம் மெல்லும் பழக்கம் இருந்தால், சுகர்-ஃப்ரீ ரகத்திலான சூயிங்கம் வாங்கி பயன்படுத்துங்கள். நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதன் மூலமாக வாயை சுத்தப்படுத்த முடியும், இது தவிர, கிரீன் டீ குடிப்பதன் மூலமாக வாயில் உள்ள பாக்டீரியாவை அகற்றிட முடியும்.

No comments

Powered by Blogger.