இதயத்தை காக்கும் பசலைக்கீரையில் அற்புத நன்மைகள்!



பசலைக்கீரையில் உள்ள கரோட்டினாய்டு என்னும் லுடின், கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தங்குவதைத் தவிர்க்கலாம்.
மூட்டு வலியில் இருந்து விடுதலை: மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரிசெய்ய பசலைக்கீரையை அதிகம் உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலியைக்குணப்படுத்தும்.பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை மற்றும் இதர கண் பிரச்சனைகளில் இருந்தும் கண்களுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.
இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும். ஆரோக்கியமான இதயம்: ஃபோலேட் அதிகம் உள்ள பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.