உடலில் சேரும் கொழுப்புகளை கரைப்பதற்கு இந்த எளிய முறையை உபயோகம் செய்து., மாரடைப்பு பிரச்சனையில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.!!


இன்றுள்ள இளம் வயதினர் மற்றும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பதால் சிறுவயதிலேயே இருதய நோய்கள் மற்றும் பிற நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது மட்டுமல்லாது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புக்களின் காரணமாக ரத்த குழாய் மற்றும் பிற உறுப்புகளில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளின் காரணமாக ரத்த அழுத்தமானது அதிகரித்து., மாரடைப்பு உருவாகும் வாய்ப்பும் உள்ளது.
கெட்ட கொழுப்புக்களை விரைவில் கரைக்கும் சில இயற்கை வைத்தியங்களைப் பற்றி இனி பார்ப்போம்
முட்டைக்கோஸ் சாறில் இருக்கும் டார்டாரிக் ஆசிட்., உடலில் சேர்ந்திருக்கும் சர்க்கரை கொழுப்பு அமிலமாக மாறுவதை தடுத்து நமது உடலை பாதுகாக்கிறது. இது மட்டுமல்லாது வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ காரணமாக இதயத்திற்கு பலம் அதிகரிக்கிறது.
பார்சலி சாறில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் காரணமாக உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ காரணமாக உடலில் கொழுப்புகள் கரைந்து தொப்பை குறைக்க முடியும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீருடன் நான்கு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல மாற்றமானது நமது உடல் பெறும்.
இலந்தை பழத்தின் இலைகளில் இருக்கும் கால்சியம் சத்து., வைட்டமின் ஏ., வைட்டமின் சி., வைட்டமின் பி2., போன்றவற்றின் காரணமாக நமது உடல் நலமானது பாதுகாக்கப்படுகிறது. கேரட் ஜூஸ் கண்களுக்கு கண்களுக்கு தேவையான குளிர்ச்சியை வழங்குகிறது. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து நமது உடலை பாதுகாக்கிறது. தினமும் ஒரு கேரட் ஜூஸ் குடித்து வந்தால் நமது உடலானது நல்ல சத்துக்களை பெறும்.
வெள்ளரிக்காயில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான அளவில் நீர்ச்சத்து உள்ளது., இதனை நாம் குடித்து வரும் பட்சத்தில் வயிறானது விரைவில் நிரம்பிவிடும்., வெள்ளரிக்காயில் கொழுப்பு செல்களை அழிக்கும் தன்மை உள்ளதால் இவை கொழுப்பு செல்களை அழித்து உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றும். இதன் மூலமாக நமது உடலானது நலம் பெறுகிறது.

No comments

Powered by Blogger.