தினமும் உலர் திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்


தினமும் உலர் திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடும் உலர் பழ வகைகளில் ஒன்று உலர் திராட்சை. சாதாரண திராட்சைப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சத்துக்களை விட, உலர் திராட்சையில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளன.
உலர் திராட்சையைக் கொண்டு பல பிரச்சனைகளுக்கு இயற்கையாக தீர்வு காண முடியும். ஏனெனில் அந்த அளவில் உலர் திராட்சையில் சத்துக்களானது அடங்கியுள்ளது.
தினமும் இரவு தூங்குவதற்கு முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து பசும் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைப் பொடி செய்து சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடித்தால், தொண்டைக் கரகரப்பு குணமடையும்.
உலர் திராட்சை பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் இருக்கிறது. எனவே, அவ்வப்போது சில உலர் திராட்சை பழங்களைச் சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி, உடலை நோய்களிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
உலர் திராட்சை பழத்தில் உள்ள தாமிரச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. எனவே, மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினமும் இருவேளை இதைச் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை நோய் குணமடையும்.
மூல நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையிலும் மாலையிலும் உணவுக்கு பின் 25 உலர் திராட்சைப் பழங்களைச் சாப்பிட்டு வர, மூல நோய் அவதியில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம்.
உடல் எடையைக் கூட்ட வேண்டும் என்றாலே பலர் கொழுப்பு நிறைந்த உணவுகளையே உண்கின்றனர். ஆனால், கொழுப்பில்லா உணவுப் பொருட்களை உண்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் கூட்ட முடியும் என்றால் அதையே சாப்பிடலாமே. அதில் ஒன்று தான் உலர் திராட்சை. எனவே, உலர் திராட்சை சாப்பிடுங்க உடலில் கொழுப்பின் அளவை கூட்டாமல் எடையை மட்டும் கூட்டுங்க.
மாதவிடாய் கோளாறுகளால் அவதிப்படும் பெண்களுக்கு உலர் திராட்சை சிறந்த மருந்தாகும். உலர் திராட்சை பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்து காலையில் குடித்து வந்தால், மாதவிடாய் கோளாறுகள் மற்றும் இதய நோய் தீரும்.

No comments

Powered by Blogger.